பதிவு செய்த நாள்
13
மார்
2023
11:03
மயிலாப்பூர்: மயிலாப்பூர், பஜார் வீதியில் பிரசித்தி பெற்ற கோலவிழியம்மன் கோவிலில், ஆண்டுதோறும் கபாலீஸ்வரர் பங்குனி பெரு விழாவுக்கு முன், மாசி மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையில் 1,008 பால்குடம் விழா நடைபெறும். அதன்படி, கபாலீஸ்வரர் கோவிலில் இருந்து, 1,008 பால்குடங்களை பக்தர்கள் சுமந்து, முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று, கோலவிழியம்மன் கோவிலை அடைந்தனர். தொடர்ந்து, உற்சவ மூர்த்திகளுக்கு பாலாபிஷேகம் செய்து, தங்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு, சிம்ம வாகனத்தில் அம்மன் எழுந்தருளி, வீதியுலா சென்றார்.