Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் ... கோயில் மாடுகளுக்கு குவியும் தீவனங்கள் கோயில் மாடுகளுக்கு குவியும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முத்துமாரியம்மன் கோயிலில் மாசி பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
முத்துமாரியம்மன் கோயிலில் மாசி பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

பதிவு செய்த நாள்

14 மார்
2023
11:03

காரைக்குடி: காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டினர்.

காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி- பங்குனி திருவிழா ஆண்டு தோறும் சிறப்பாக நடைபெறும். முத்துமாரியம்மன் கோயில் பால்குட திருவிழா மிகவும் பிரசித்தி பெற்ற விழாவாகும். ஒரே நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் பால்குடம், தீச்சட்டி எடுத்தும் அலகு குத்தியும் நேர்த்திகடன் செலுத்துவர். முத்துமாரியம்மன் கோயில், 67 வது மாசி பங்குனி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றும் நிகழ்ச்சியை தொடர்ந்து காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. ஒரே நாளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காப்புக் கட்டிக் கொண்டனர். முதல் நாளான இன்று ஏராளமான பக்தர்கள் பால்குடம் தீச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மார்ச் 21 ஆம் தேதி கோயில் கரகம், மது, முளைப்பாரி எடுக்கும் நிகழ்ச்சியும், மார்ச் 22 ஆம் தேதி காலை முக்கிய திருவிழாவான காவடி, பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சியும் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. மாலையில் பருப்பூரணியில் கரகம் சேர்க்கும் நிகழ்ச்சியும், இரவு காப்பு பெருக்குதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. மார்ச் 23, இரவு அம்மன் திருவீதி உலாவும் 24 ஆம் தேதி சந்தன காப்பு அலங்காரமும் நடைபெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சேத்தியாத்தோப்பு: கூடலையாற்றுார் நர்த்தனவல்லபேஸ்வரர் கோவில் மாசி மகம் மகோற்சவம் கொடியேற்று விழா ... மேலும்
 
temple news
உத்திரமேரூர்: சீட்டணஞ்சேரி காளீஸ்வரர் கோவிலில், 20 ஆண்டுகளுக்கு பின், மஹா கும்பாபிஷேக விழா இன்று ... மேலும்
 
temple news
குன்றத்துார்: குன்றத்துார் சுப்பிரமணியசுவாமி கோவிலில், மாசி பிரம்மோத்சவ விழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலின் பிரம்மோத்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
செந்துறை: - நத்தம் செந்துறையில் ராமர்கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar