திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோயிலில் கருட சேவை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14மார் 2023 08:03
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலின் உபகோயிலான திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோயிலில் கருட சேவை கோலாகலமாக நடைபெற்றது.
திருச்சிக்கு அருகில் துறையூர் போகும் வழியில் அமைந்துள்ளது 108 வைணவத் திவ்ய தேசங்களில் நான்கவது திவ்ய தேசமுமான திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோவில்.இக்கோயிலில் மார்ச்10ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய ‘பிரம்மோத்ஸவ உற்சவ திருவிழாவில் உற்சவ மூர்த்தி காலை மற்றும் மாலை வேளைகளில் பல்வகையான வாஹனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கருட சேவை நேற்று 13ம் தேதி இரவு 7.30 மணியவில் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பேரானந்தம் அடைந்தனர்.
பிரம்மோத்சவத்தின் ஐந்தாம் நாளான இன்று 14ம் தேதி உற்சவ பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து காலை 4.30 மணிக்கு புறப்பட்டு வாஹன மண்டபம் சென்றடைந்தார். அங்கிருந்து காலை 5 மணியளவில் ஹம்ச வாகனத்தில் புறப்பாடு கண்டருளி திருவீதி உலாவில் பக்தர்களுக்கு சேவை சாதித்து காலை 6.15 மணிக்கு வாஹன மண்டபத்திதை அடைந்தார். தொடர்து காலை 9.30 மணியளவில் வாஹன மண்டபத்திலிருந்து புறப்பட்டு ஆஸ்தான மண்டபம் சென்று அங்கிருதவாறு பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். பின்னர் மாலை 6.30 மணியவில் சேஷ வாஹனத்தில் புறப்பாடு கண்டருளி திருவீதி திருஉலா வந்து இரவு 10.00 மணியளவில் கண்ணாடி அறை சேருகிறார்.