போத்தனூர்: சுந்தராபுரம் அடுத்து குறிச்சி குளக்கரையில் பொங்காளியம்மன் கோவில் உள்ளது. இங்கு மாசி திருவிழா நேற்று காலை கணபதி ஹோமத்துடன் துவங்கியது. மதியம் கொடியேற்றப்பட்டது. வரும், 21 மாலை, 5:00 மணிக்கு மேல் அம்மன் அழைப்பு மற்றும் திருக்கல்யாணம் நடக்கின்றன. 22 காலை, 9:00 மணிக்கு மேல் குறிச்சி பஸ் ஸ்டாப் கற்பக வினாயகர் கோவிலில் இருந்து பால்குடம், தீர்த்த குடம் புறப்படுதலும் மதியம் மஹா அபிஷேக அலங்கார பூஜை மற்றும் தீபாராதனையும் நடக்கின்றன. தொடர்ந்து மாவிளக்கு பூஜை நடக்கிறது. 23 மாலை, 5:00 மணிக்கு மேல் அம்மன் திருவீதி உலாவும், 24 மதியம் மறுபூஜை, அன்னதானம் ஆகியவையும் நடக்கின்றன.