பழமையான மகாதேவர் கருவறை சிவலிங்கம் மீது அருவியாக கொட்டிய தண்ணீர் : பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17மார் 2023 09:03
கருங்கல்: கருங்கல் அருகே மகாதேவர் கோவில் கோபுரத்தில் இருந்து கருவறை சிவலிங்கம் மீது அருவிபோல் தண்ணீர் விழுந்து வடிந்த காட்சி பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது.
குமரி மாவட்டம் கருங்கல் கப்பியறை அருகே பாத்திர மங்கலம் பகுதியில் மகாதேவர் கோயில் உள்ளது. கோவிலில் ஸ்ரீராம் என்பவர் போற்றியாக உள்ளார். நேற்று காலை போற்றி வழக்கம் போல் நடையை திறந்து கருவறையில் தீபம் ஏற்றிவிட்டு வெளியே சென்று தண்ணீர் எடுத்து வந்தார். அப்போது அவர் கண்ட காட்சி மெய்சிலிர்க்க வைத்தது. கோவில் கருவறையில் சிவலிங்கத்தின் மீது அருவிபோல் தண்ணீர் விழுந்து வடிவதை கண்டு ஆச்சர்யம் அடைந்தார். அங்கு இருந்த பக்தர்களிடம் இதை தெரிவித்தார். இதை கண்ட பக்தர்கள் அனைவரும் பார்த்து பக்தி பரவசம் அடைந்தனர்.