Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழமையான மகாதேவர் கருவறை சிவலிங்கம் ... கோட்டைமேடு கரிவரதராஜ பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம் கோட்டைமேடு கரிவரதராஜ பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சென்னை பத்மாவதி தாயார் கோவிலில் மஹா கும்ப சம்ரோக்ஷணம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
சென்னை பத்மாவதி தாயார் கோவிலில் மஹா கும்ப சம்ரோக்ஷணம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

17 மார்
2023
10:03

சென்னை: திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில், சென்னை தி.நகர், ஜி.என்.செட்டி சாலை, பத்மாவதி தாயார் கோவிலில் மஹா கும்ப சம்ரோக்ஷணம் கோலாகலமாக நடைபெற்றது.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில், சென்னை தி.நகர், ஜி.என்.செட்டி சாலையில் பத்மாவதி கோவில் கட்ட திட்டமிடப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன், காஞ்சி சங்கரமடத் தின் மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், பூமி பூஜை செய்து, இதற்கான பணிகளை துவக்கி வைத்தார். பாஞ்சராத்ர ஆகமப்படி அமைக்கப்பட்டுள்ள இக்கோவிலின் கட்டுமானப்பணிகள் பூர்த்தியான நிலையில், கடந்த பிப்., 23ம் தேதி, பத்மாவதி தாயார் கோவிலுக்கான துவஜஸ்தம்பம் எனும் கொடிமரப் பிரதிஷ்டை நடந்தது. இதை முன்னிட்டு, ஆராதனை , புன்னியாகவாசனம், எந்திர பிரதிஷ்டை, பஞ்சாமிருத அபிஷேகம், யந்திர ஸ்தாபனம் நடந்தது. இதையடுத்து, கொடிமர பிரதிஷ்டை நடந்தது.

திருச்சானுாரில் அமைந்துள்ள பத்மாவதி தாயார் கோவில் மூலவர் சிலை செய்யப்பட்ட இடத்திலேயே, தி.நகர்., பத்மாவதி தாயார், துவாரபாலகர்கள் சிலைகள் , கோபுர கலசங்கள், உற்சவ விக்ரஹங்கள் வடிக்கப்பட்டன. திருப்பதியில் இருந்து கடந்த மாதம், 28ம் தேதி அந்த சிலைகள் தி.நகருக்கு கொண்டு வரப்பட்டன. பின், மூலவர், துவார பாலகர்கள் சிலைகளுக்கு பூஜைகள் நடத்தி நெல்லில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. தி.நகர் பத்மாவதி தாயார் கோவிலுக்கானசம் ரோக்ஷணம் இன்று நடக்கவுள்ள நிலையில், 12ம் தேதி முதல் வாஸ்து ஹோமம், சதுஷ்ஸ்டான
அர்ச்சனை, அக்னி பிரதக்ஷனா நடந்தது. அதைத் தொடர்ந்து மூர்த்தி ஹோமம், பூர்ணாஹூதி, மனோன்மான சாந்தி ஹோமம் நடந்தன. நேற்று முன்தினம், மூலவர் சிலைக்கு ஜலதிவாசம்,
பாலாபிஷேகம் நடத்தப்பட்டது. நேற்று அஷ்ட பந்தன சகித மூல விக்ரஹ பிரதிஷ்டை மஹோற்சவம் நடந்தது. இதை முன்னிட்டு, நேற்று காலை 7:00 மணி முதல் சதுஷ்டான அர்ச்சனை, மூர்த்தி ஹோமம், பிரயாச்சிதம், பூமஹுதி செய்யப்பட்டது. காலை 9:00 மணிக்கு அஷ்ட பந்தன சகித மூல விக்ரஹ பிரதிஷ்டைசெய்யப்பட்டது. தொடர்ந்து துவஜஸ்தம்ப சய ஜலதிவாசம் நடந்தது.

சம்ரோக்ஷண நாளான இன்று காலை 7:30 மணிக்கு மஹா கும்ப சம்ரோக்ஷணம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து காலை 10:00 மணிக்கு பத்மாவதி, ஸ்ரீனிவாசர் கல்யாண உற்சவம் நடக்கிறது. சம்ரோக்ஷணத்தை முன்னிட்டு, காஞ்சி மடாதிபதி சங்கரவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மங்களாசாசனம் செய்தார். ஸ்வரூபான ந்தேந்திர சரஸ்வதி மகா சுவாமிகள், ஸ்வரூபான ந்தேந்திரசரஸ்வதி சுவாமிகள் பங்கேற்றனர். மேலும், திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் சுப்பாரெட்டி, செயல் அலுவலர் தர்மா ரெட்டி, தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தமிழக ஆலோசனைக்குழு தலைவர் சேகர், நடிகை காஞ்சனா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இக்கோவில் சம்ரோக்ஷணம், திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. திருக்கல்யாணம் முடிந்த பின், காலை 11:00 மணி முதல் பக்தர்கள் பத்மாவதி தாயாரை தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர். இதற்கான ஏற்பாடுகளை, தமிழக ஆலோசனைக்குழு தலைவர் சேகர்  தலைமையில், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவள்ளூர்: தை மாத பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு திருவள்ளூர் ஸ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள் கோவில் ... மேலும்
 
temple news
பழநி; பழநி தைப்பூசத்திற்கு முருகன் மலைக்கோயில் செல்ல பக்தர்களின் வசதிக்கேற்ப பாதை மாற்றம் ... மேலும்
 
temple news
குன்றத்துார்: குன்றத்துாரில், சேக்கிழார் கோவில் மஹா கும்பாபிஷேகம், பிப்., 11ல் நடக்க ... மேலும்
 
temple news
துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வரும் ... மேலும்
 
temple news
திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி, 15 வேலம்பாளையம் அடுத்த காவிலிபாளையத்தில், ஸ்ரீசெல்வ விநாயகர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar