கொட்டாம்பட்டி: கொட்டாம்பட்டி வடக்குபுற காளியம்மன் கோயில் பங்குனி மாத திருவிழாவை முன்னிட்டு இன்று( மார்ச் 19) கோயிலில் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மார்ச் 25 ல் பூசாரி கோனார் குளத்தில் இருந்து 3 கி.மீ., தொலைவில் உள்ள கோயிலுக்கு கரகம் எடுக்கிறார். மார்ச் 26 ல் பொய் செல்லா மெய் அய்யணார் கோயிலில் இருந்து பால்குடம் எடுத்தும், தீச்சட்டி ஏந்தியும், அலகு குத்தியும் காவடி எடுத்து 4 கி.மீ.. தொலைவில் உள்ள காளியம்மன் கோயிலில் நேர்த்திக்கடன் செலுத்துவர். மாலை பூ தட்டு ஊர்வலமும், மார்ச் 27 ல் கிடா வெட்டி பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும், மாலை வீடுகளில் உள்ள முளைப்பாரியை கோயிலுக்கு கொண்டு வர உள்ளனர். மார்ச் 28 கோயிலில் வைக்கப்பட்டுள்ள முளைப்பாரியை பக்தர்கள் ஊர்வலமாக கொண்டு சென்று பூசத்தாய் ஊருணியில் கரைக்கும் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.