காரடர்ந்தகுடி புரக்கோட்டை காளியம்மன் கோயிலில் மண்டல பூஜை விழா
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26அக் 2026 10:10
நயினார்கோவில்: பரமக்குடி அருகே நயினார்கோவில் ஒன்றியம் காரடர்ந்தகுடி புரக்கோட்டை காளியம்மன் கோயில் மண்டல பூஜை விழா நடந்தது.
காரடர்ந்தகுடி ஆண்டி பண்டாரத்தார் சமூக சபைக்கு புராதன பாத்தியமான புரக்கோட்டை காளியம்மன் கோயிலில் செப்., 7 மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மண்டல அபிஷேகம் துவங்கிய நிலையில், நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இதனையொட்டி மண்டல பூஜை பூர்த்தி வைபவம் மற்றும் சங்காபிஷேகம் நடத்தப்பட்டது. மணிகண்டன் சிவாச்சாரியார் தலைமையில் ஹோமங்கள், மகா பூர்ணாகுதி நடந்தது. பின்னர் புனித தீர்த்த குடங்கள் புறப்பாடாகி கோயிலை வலம் வந்த நிலையில் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. சபை தலைவர் சதாசிவம் உள்ளிட்ட நிர்வாகிகள், திருப்பணி குழுவினர், பக்தர்கள் பலரும் பங்கேற்றனர். பிரசாதங்கள், அன்னதானம் வழங்கப்பட்டது. கோயிலில் ஒவ்வொரு அமாவாசை நாளிலும் இரவு 7:00 மணிக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்து வருகிறது.