காரைக்குடி முத்துமாரியம்மன் கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20மார் 2023 10:03
காரைக்குடி: காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழாவையொட்டி, விடுமுறை நாளான நேற்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் தீச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் , 67 வது மாசி பங்குனி திருவிழா மார்ச் 14 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை தொடர்ந்து காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. மார்ச் 21 ஆம் தேதி கோயில் கரகம், மது, முளைப்பாரி எடுக்கும் நிகழ்ச்சியும், மார்ச் 22 ஆம் தேதி காலை முக்கிய திருவிழாவான காவடி, பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சியும் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. மாலையில் பருப்பூரணியில் கரகம் சேர்க்கும் நிகழ்ச்சியும், இரவு காப்பு பெருக்குதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இந்நிலையில், விடுமுறை நாளான நேற்று அதிகாலை முதல் இரவு வரை முத்தாலம்மன் கோயிலில் இருந்து மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் வரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், தீச்சட்டி எடுத்தும் அழகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினார்.