அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் 24ம் தேதி திருப்பணி துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21மார் 2023 10:03
அவிநாசி:அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் கும்பாபிேஷக திருப்பணிகளுக்கான துவக்க விழா, வரும் 24ம் தேதி நடைபெற உள்ளது.
அவிநாசிலிங்கேஸ்வரர் கும்பாபிஷேகம் நடைபெற்று 14 ஆண்டுகள் ஆகிறது. தற்போது கும்பாபிஷேக திருப்பணிகளில், அரசமரத்து விநாயகருக்கு கடந்த இரண்டு மாதம் முன் பாலாலயமும், தாமரை குளக்கரையில் அமைந்துள்ள சுந்தரமூர்த்தி நாயனார் கோவிலில் திருப்பணிகளுக்கான பாலாலய பூஜைகளும் நடைபெற்றது. கடந்த, 13ல், ஸ்ரீ கருணாம்பிகை அம்மன் சன்னதி முன் உள்ள ஐந்து நிலை ராஜகோபுரத்திற்கு கோவை ராமானந்தா அடிகளார் அறக்கட்டளையின் சார்பில், 11 லட்சம் ரூபாயில் திருப்பணி செய்வதற்கான பாலாலய பூஜைகள் நடைபெற்றது. கோவில் திருப்பணிகள் செய்து கும்பாபிேஷகம் நடத்துவதற்கு ஹிந்து சமய அறநிலையத்துறையின் மூலம் முடிவு செய்யப்பட்டது. இதற்காக வரும், 24ம் தேதி காலை 7:00 மணிக்கு அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் திருப்பணி துவக்க விழா நடைபெற உள்ளதாக, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.