அன்னூர்: சாலையூர், பழனி ஆண்டவர் கோவில் மண்டலபிஷேக நிறைவு விழா இன்று நடக்கிறது. சித்தர்கள் வழிபட்ட 1,000 ஆண்டுகள் பழமையான, சாலையூர், பழனி ஆண்டவர் கோவிலில் பல கோடி ரூபாய் செலவில் திருப்பணி செய்யப்பட்டது. பிப். 1ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. இதையடுத்து 48 நாட்கள் மண்டல பூஜை நடைபெற்று வருகிறது. இன்று (21ம் தேதி) மண்டல பூஜை நிறைவு விழா நடக்கிறது. மதியம் 2:00 மணிக்கு அச்சம்பாளையம் சண்முகம் குழுவின் பஜனை நடக்கிறது. 3:30 மணிக்கு வேள்வி வழிபாடு, 108 சங்கு வழிபாடு, மகா அபிஷேகம், சங்கு அபிஷேகம் நடக்கிறது. மாலை 6:30 மணிக்கு அலங்கார பூஜை நடக்கிறது. இதையடுத்து பல்லடம், அனுப்பப்பட்டி ஆசிரியர் பழனிச்சாமி குழுவின் வள்ளி கலைக்குழுவின் வள்ளி கும்மி ஆட்டம் நடக்கிறது. அனைவரும் பங்கேற்று இறையருள் பெற விழா குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.