அலங்காநல்லூர் : அலங்காநல்லூர் கேட்டுக்கடை வெக்காளியம்மன், பாண்டி முனீஸ்வரர் கோயிலில் பங்குனி அமாவாசை முன்னிட்டு சிறப்பு யாக பூஜைகள் நடந்தன. அம்மன், சுவாமிக்கு அபிஷேக ஆராதனையை தொடர்ந்து வண்ண மலர்களால் அலங்கார வழிபாடு செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை நிர்வாகி தனம் அம்மாள் மற்றும் கிராமத்தினர் செய்திருந்தனர். காஞ்சாரம்பேட்டை பாரைப்பட்டி பேசும் கன்னிமார் கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. வாடிப்பட்டி நீரேத்தான் கருமாரியம்மன், காளியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.