கோவை: குறிச்சிகுளம் கற்பக விநாயகர், ஸ்ரீ பொங்காளியம்மன் கோவிலில் மாசி திருவிழா கடந்த 14ம் தேதி துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் இன்று செவ்வாய்கிழமை அம்மனுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் தரிசனம் செய்தனர்.