பதிவு செய்த நாள்
22
மார்
2023
06:03
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சத்யசாய் கோயில் (மந்திர்) விமான கோபுர கலச பிரதிஷ்டை மற்றும் மகா கும்பாபிஷேக மஹோத்ஸவம் ஆகம முறைப்படி நடத்தப்பட்டது. மகா கும்பாபிஷேக பூஜையில் ஸ்ரீகாளஹஸ்தி எம்எல்ஏ மசூதன் ரெட்டி தம்பதியினர் பங்கேற்றனர்.
ஸ்ரீ காளஹஸ்தியில் உள்ள முத்தியாலம்மன் கோயில் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ சத்ய சாய் கோயில் விமான கோபுர கலச பிரதிஷ்டை மற்றும் மகா கும்பாபிஷேக நிகழ்ச்சி நடைபெற்றது. சத்ய சாய் சேவா சமிதி சார்பில், வேத பண்டிதர் தங்கிரால. லட்சுமி நாராயண சர்மா தலைமையில், சாயிபாபா கோயில் கலச பூஜை, ஹோம பூஜை, வேத மந்திரங்கள் முழங்க அர்ச்சகர்கள் வழிபாடு நடத்தினர். அதன்பின், மங்கள வாத்தியங்கள் முழங்க சாய் பாபா வின் முழக்கங்களுடன், முக்கிய சிகர கலசம், கோவிலின் உச்சிக்கு எடுத்துச் செல்லப்பட்டு, வேத மந்திரங்களுடன் கலசம் பிரதிஷ்டை செய்து வேதோ யுக்தம் நடந்தது. அதன்பின், விமான சிகர கலச நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு, மங்கள ஆரத்தி சமர்ப்பிக்கப்பட்டது இந்த சிறப்பு பூஜை நிகழ்ச்சிகளில் ஸ்ரீ காளஹஸ்தி தொகுதி எம்எல்ஏ மதுசூதன் ரெட்டி தம்பதியினர், எம்எல்ஏவின் மகள் பவித்ரா ரெட்டி மற்றும் உள்ளூர் ஒய்.எஸ்.ஆர். பிரமுகர்கள் மற்றும் திரளான சாய் பக்தர்கள் கலந்து கொண்டு சாயி நாமஸ்மரனம் செய்து ஆன்மிக மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். உகாதி பர்வதினத்தன்று ஸ்ரீ சத்ய சாய் மகா கும்பாபிஷேக பூஜையில் பங்கேற்பது மகிழ்ச்சி அளிப்பதாக எம்எல்ஏ மதுசூதன் ரெட்டி தெரிவித்தார். வாஸ்து அடிப்படையில் இந்தக் கோயிலுக்குச் சென்றால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்று எம்எல்ஏ கூறினார்.