ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயில் தேரோட்டம் விமரிசை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22மார் 2023 03:03
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் பூக்குழி திருவிழாவின் நிறைவு நாளான இன்று தேரோட்டம் வெகு சிறப்புடன் நடந்தது.
இதனை முன்னிட்டு இன்று காலை 11:00 மணிக்கு திருத்தேருக்கு பெரிய மாரியம்மன் எழுந்தருளினார். அங்கு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, 11:25 மணிக்கு தேரினை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். ஒரு மணி நேரத்தில் கோயில் வீதிகள் சுற்றி வந்து தேர் நிலையம் அடைந்தது. கோயிலில் ஏராளமான பக்தர்கள் மொட்டை போட்டும், மாவிளக்கு எடுத்தும் தங்கள் நேர்த்திக்கடன்களை செலுத்தி, அம்மனை தரிசித்தனர். விழாவில் இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உதவி ஆணையர் கருணாகரன், செயல் அலுவலர்கள் ஜவகர், சத்தியமூர்த்தி, சத்யநாராயணன் மற்றும் அறநிலையத் துறை அலுவலர்கள் பங்கேற்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர் டி.எஸ்.பி. சபரிநாதன், இன்ஸ்பெக்டர் கீதா தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.