பதிவு செய்த நாள்
17
செப்
2012
11:09
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி பெருமாள் கோவில் திருப்பணி செய்வது குறித்து ராமமூர்த்தி எம்.எல்.ஏ., ஆலோசனை நடத்தினார்.விக்கிரவாண்டியில் உள்ள பழமைவாய்ந்த வரதராஜபெருமாள் கோவில், பராமரிப்பின்றி உள்ளது.கோவிலுக்கு திருப்பணிகள் செய்வது குறித்து பொதுமக்கள் சார்பில் தமிழக முதல்வர், அமைச்சர், எம்.எல்.ஏ., மற்றும் கலெக்டருக்கு கோரிக்கை மனு அனுப்பினர்.இதன்பேரில் ராமமூர்த்தி எம்.எல்.ஏ., நேற்று முன்தினம் மாலை பெருமாள் கோவில் வளா கத்தை நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.கோவிலை புதுப்பித்து திருப்பணிகள் செய்வது குறித்து, இந்து சமய அறிநிலைய துறை ஆணையர் சிவாகரனிடம் கேட்டறிந்தார். கோவில் சொத்துகள், நிலங்கள் குறித்து கேட்டறிந்தார்.முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் குமாரசாமி, அ.தி.மு.க., நகர செயலாளர் லோகையன், ஜெனார்த்தனம், கலியபெருமாள், அகத்தீஸ்வரன் கோவில் தர்மகர்த்தா ராமலிங்கம் உடனிருந்தனர்.