மேல்நல்லாத்துார்: கடம்பத்துார் ஒன்றியம், மேல்நல்லாத்துார் ஊராட்சியில், நுங்கம்பாக்கம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது பாடிகாட் முனீஸ்வரர் கோவில்.
இங்கு 10ம் ஆண்டு நட்சத்திர பூஜையின் துவக்க விழா நேற்று, காலை 9:00 மணி முதல், 10:30 மணிக்குள் துவங்கியது. பாடிகாட் முனீஸ்வரர் மற்றும் கோவில் வளாகத்தில் உள்ள நாகாத்தம்மன், கால பைரவர், ராகு, கேது, சத்குரு சாய்பாபா, அய்யப்பன் போன்ற சுவாமிகளுக்கு நட்சத்திர பூஜை மற்றும் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. அதை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் பாடிகாட் முனீஸ்வரர்மற்றும் சுவாமிகள் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் மேல்நல்லாத்துார் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.