அலங்காநல்லூர்: அலங்காநல்லூர் அருகே சிறுவாலை ஜமீன் அம்பலத்தாடியில் ஆண்டிச்சாமி, கருப்பண்ணசாமி, மதுரைவீரன், தொழுதாயி அம்மன், பட்டவன் சாமி வழிபாட்டு பங்காளிகளுக்கு பாத்தியப்பட்ட பாலமுருகன் ஆண்டிச்சாமி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. மார்ச் 23ல் கணபதி ஹோமத்துடன் சிறப்பு யாகசாலை பூஜைகள் துவங்கின. நேற்று காலை 2ம் கால யாக பூஜையை தொடர்ந்து நவநீத சிவாச்சாரியார் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது. கோயில் பூஜாரிகள் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் பங்காளிகள், கிராமத்தினர் செய்தனர்.