அன்னூர்: சின்ன வடவள்ளி மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 27ம் தேதி நடக்கிறது.
அன்னூர் அருகே சின்ன வடவள்ளியில், பழமையான மாகாளியம்மன் மற்றும் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டன. இதையடுத்து கும்பாபிஷேக விழா வருகிற 26ம் தேதி காலை 10:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்குகிறது. இதையடுத்து சுவாமிக்கு 18 வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்படுகிறது. மதியம் கங்கை தீர்த்தத்துடன் ஊர்வலமாக செல்லும் வைபவம் நடக்கிறது. இரவு 7:00 மணிக்கு முதல் கால வேள்வி பூஜை நடக்கிறது. வருகிற 27ம் தேதி அதிகாலையில் இரண்டாம் கால வேள்வி பூஜை நடக்கிறது. காலை 9:00 மணிக்கு மாகாளியம்மன் மற்றும் மாரியம்மனுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையடுத்து சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை நடக்கிறது. மகா தீபாராதனை காண்பிக்கப்படுகிறது, மதியம் 12:00 மணிக்கு இடுகம்பாளையம், வாக்கனாங்கொம்பு, ராஜபுரம் குழுக்களின் கும்மி ஆட்டம் மற்றும் பஜனை நடக்கிறது.