காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை 52. 47 லட்சம் ரூபாய் கோவிலுக்கு வருவாயாக கிடைத்தது.
நேற்று முன்தினம் கோவிலில் உள்ள ஆறு உண்டியல்கள் பெருமாள் கோவில் நிர்வாக அறங்காவலர் சீனிவாசன், மற்றும் வல்லக்கோட்டை முருகன் கோவில் செயல் அலுவலர் கார்த்திகேயன், கோவிந்தவாடி தட்சணாமூர்த்தி கோவில் செயல் அலுவலர் சுரேஷ் ஆகியோர் முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டன. இதில் ரொக்கம் 52 லட்சத்து 47 ஆயிரத்து,184 ரூபாய். தங்கம், 64 கிராம், வெள்ளி 341 கிராம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியது கோவிலுக்கு வருவாயாக கிடைத்தது. குமரகோட்டம் முருகன் கோவிலில் நேற்று பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டன. இதில் ரொக்கம் 14 லட்சத்து 55 ஆயிரத்து, 585 ரூபாயும் தங்கம், 430 கிராம், வெள்ளி, 700 கிராம் கோவிலுக்கு வருவாயாக கிடைத்தது.