திருச்சுழி திருமேனிநாதர் கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27மார் 2023 04:03
திருச்சுழி: திருச்சுழி கோயிலில் பங்குனி உற்சவ திருவிழா கொடி ஏற்றத்துடன் துவங்கியது.
திருச்சுழியில் பழமை வாய்ந்த திருமேனிநாதர், துணை மாலையம்மன் கோயிலில் பங்குனி உற்சவ விழா இன்று காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் திருவிழா நடைபெறும். முன்னதாக யாகசாலை வேள்வி பூஜைகள் நடத்தப்பட்டு கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. பின்னர் கொடி ஏற்றப்பட்டது. ஒவ்வொரு நாளும் சுவாமி, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வெள்ளி, ரிஷப, மயில், சிம்ம வாகனங்களில் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பர். ஏப்ரல் 2 ம் தேதி திருக்கல்யாணமும், 3 ம் தேதி தேரோட்டமும் நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.