பதிவு செய்த நாள்
27
மார்
2023
04:03
கோபால்பட்டி, கோபால்பட்டி அருகே கே.அய்யாபட்டியில் காளியம்மன், பகவதி அம்மன் கோவில்களில் 10 ஆண்டுக்குப் பின் திருவிழா நடத்த ஊர் பொதுமக்கள் கூட்டம் நடந்தது.
கே.அய்யாபட்டியில் காளியம்மன், பகவதி அம்மன், மாணிக்க விநாயகர், முருகன் கோவில்கள் உள்ளது. இந்தக் கோயில்களில் கடந்த 2013 ஆம் ஆண்டு 10 ஆண்டுகளுக்கு முன்னர் திருவிழா நடத்தப்பட்டது. பத்து ஆண்டுகள் கடந்த நிலையில் மீண்டும் திருவிழா நடத்த கே.அய்யாபட்டி, பாப்பாத்தி அம்மன் நகர், பாப்பம்பட்டி உள்ள உள்ளிட்ட பல கிராம மக்களால் திருவிழா நடத்த கூட்டம் நேற்று காலை காளியம்மன் கோவிலில் நடந்தது. இதில் சுற்று வட்டார கிராம மக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு திருவிழா நடத்த முடிவு செய்தனர். பத்தாண்டுகளுக்குப் பின் திருவிழா நடைபெறுவதால் 8 நாட்கள் வெகு விமர்சையாக திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி வரும் மே மாதம் 17ஆம் தேதி காப்பு கட்டப்பட்டு, 23, 24,25 உள்ளிட்ட நாட்களில் தீச்சட்டி எடுத்தல், மாவிளக்கு எடுத்தல், பொங்கல் வைத்து கிடாய் வெட்டுதல், அம்மன் மஞ்சள் நீராட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த முடிவு செய்யப்பட்டது.