தேவகோட்டை: தேவகோட்டை நித்தியகல்யாணிபுரத்தில் பாகம்பிரியாள் சமேத திருக்கயிலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று முதல் ஏகாதச ருத்ர ஹோம ஜெபம் நடந்தது. கோவில் நிர்வாகி ரமேஷ் வரவேற்றார். கொலை, கொள்ளை இல்லாமல் அமைதியாக மக்களும், நாடும் சுபீட்சமாக இருக்க வேண்டி கருப்பு குருக்கள் தலைமையில் ஏகாதச ருத்ர ஹோம ஜெபம் நடந்தது. 13 பேர் பங்கேற்று பல சிறப்பு வேள்விகள் சிறப்பு ஹோமம் நடத்தினர். பூர்ணாகுதி கோபூஜையை தொடர்ந்து திருக்கயிலேஸ்வரர் சுவாமிக்கும், பாகம்பிரியாள் அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிக்கு வெள்ளி நாகர் முடியில் சிறப்பு அலங்காரம் சிறப்பு பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் ஜெபத்தில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.