சிவகிரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27மார் 2023 05:03
சிவகிரி: சிவகிரி மீனுக்கு பாத்தியப்பட்ட பாலசுப்ரமணிய சுவாமி கோயில் பங்குனி தேரோட்ட விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏப்.3ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. சிவகிரி மீனுக்கு பாத்தியப்பட்ட கூடாரப்பாறை பாலசுப்பிரமணிய சுவாமி யில் பங்குனி தேரோட்டம் மற்றும் தெப்ப திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. கொடியேற்ற நிகழ்ச்சியில் சிவகிரி மீன்தார் விக்னேஷ் சின்னத்தம்பியார், பாலகுமாரி நாச்சியார், கணக்கர் குரு, சிவகிரி வேலவர் மகாசபை தலைவர் குருசாமி பாண்டியன், துணை தலைவர் விக்னேஷ் ராஜா, செயலாளர் சுந்தரராஜன், துணை செயலாளர் கற்பக சுந்தரம், பெருளாளர் ராஜேந்திரன் மற்றும் அனைத்து மண்டகபடிதாரர், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மண்டகபடிதாரர்கள் சார்பில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. ஏப். 3ம் தேதி தேரோட்டம், ஏப். 4ம்தேதி தெப்பத்திருவிழா நடக்கிறது. ஏற்பாடுகளை சிவகிரி ஜமீன்தார் விக்னேஷ் சின்ன தம்பியார் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.