குலசேகரன்கோட்டை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27மார் 2023 05:03
வாடிப்பட்டி: வாடிப்பட்டி அருகே குலசேகரன்கோட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. 800 ஆண்டுகள் பழமையான இக்கோயிலில் புதிதாக 72 அடி உயர ராஜகோபுரம் கட்டப்பட்டது.விநாயகர், முருகன், பிரம்மதேவர், சூரிய, சந்திர பகவான் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேக சிறப்பு யாக பூஜைகள் கணபதி ஹோமத்துடன் மார்ச் 23ல் துவங்கின. இன்று காலை 4ம் கால யாக பூஜையை தொடர்ந்து கடம் புறப்பாடு நடந்தது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க ராஜ கோபுரம், விமான கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டது. மூலவர், உற்ஸவர், பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை திருப்பணி குழுவினர், கிராமமக்கள் செய்திருந்தனர்.