Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மயிலம் முருகன் கோவிலில் பங்குனி ... தாயமங்கலம் முத்துமாரியம்மன் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது தாயமங்கலம் முத்துமாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இன்று கேட்டவரம் உடனே தரும் ஷீரடி சாய்பாபா பிறந்தநாள்!
எழுத்தின் அளவு:
இன்று கேட்டவரம் உடனே தரும் ஷீரடி சாய்பாபா பிறந்தநாள்!

பதிவு செய்த நாள்

30 மார்
2023
09:03

கலியுகத்தில் கேட்டவர்க்கு கேட்டவரத்தை உடனே அளிக்கும் வள்ளலாகத் திகழும் ஷீரடி பாபாவை ஒரு முறை நினைத்தாலே போதும், ஒன்பது தலைமுறையில் செய்த பாவங்கள் தீரும். ஷீரடி நோக்கி ஓரடி வைத்தாலே உங்கள் உள்ளத்தில் உள்ள துயரங்கள் யாவும் தூசியாகப் பறக்கும்.

பாபாவின் உருவம் ஓர் அற்புதம்: கால் மேல் கால் போட்டு அமர்ந்த நிலையில் காட்சிதரும் பாபாவின் உருவ அமைப்பு மிகவும் ஆற்றல் வாய்ந்ததாக அவரது பக்தர்களால் பூஜிக்கப்படுகிறது. அவர் தமது வலது காலை, இடது முழங்கால் மீது போட்டு தனது இடது கையினை வலது கால் பாதத்தின் மீது படரவிட்டுள்ளார். பாபாவின் இடது கை ஆள் காட்டி விரலுக்கும், நடு விரலுக்கும் நடுவே உள்ள வலது கால் பெருவிரலை இரண்டு மரக்கிளைக்கு நடுவே சூரியனைப் பார்ப்பது போல தரிசித்து பாபாவின் ஒளியைப் பெறலாம். மேலும் பாபாவின் பாதங்களை நமது கண்ணீரால் கழுவுவதாக மனதளவில் நினைத்தால் இதயம் தூய்மை அடையும் என்றும், அன்பை சந்தனமாக பூசச் சொல்லியும், நமது நம்பிக்கையை பாபாவின் மேலாடையாகவும் கருதச் சொல்கிறார். நமது சிரசை பாபாவின் பாதத்தில் வைத்து வணங்கிய பின்னர், நமது பக்தியை சாமரமாகக் கொண்டு வீசி, பாபாவின் வெப்பத்தைத் தணிக்க வேண்டும். அதுவே சிறந்த பாபா வழிபாடு.

பாபாவின் மூல மந்திரம்!

ஓம் ஐம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம் நமோ பகவதே
ஸர்வலோக ஹிதங்கராய, ஸர்வதுக்க வாரகாய
ஸர்வாபீஷ்ட பலப்ரதாயினே சமர்த்த சத்குரு சாயிநாத்
ஸ்வாமினே வரவ-ரத ஸர்வ ஜனம்மே வசமானய ஸ்வாஹா

சாயிபாபாவின் பன்னிரு திருப்பெயர்கள்!

லோகத்ரய குரவே நமஹ, ஸர்வ பூஜிதாய நமஹ, ஸர்வஜிதே நமஹ, நீதிகர்த்தரே நமஹ, ஸர்வேசாய நமஹ, தயாவதே நமஹ, விச்வாத்மனே நமஹ, மகாபலாய நமஹ, சுபலக்ஷணாய நமஹ, மதிமதே நமஹ, ஸர்வாபீஷ்டதாய நமஹ, பரமகுருவே நமஹ

ஷீரடி சாயிபாபாவின் இந்தப் பன்னிரு நாமாக்களை நேரம் கிடைக்கும்போதெல்லாம் சொல்லிவர, மனதில் நிம்மதி நிறையும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; கரிங்கரைப்புள்ளி காடாங்கோடு பகவதி அம்மன் கோவில் பிரதிஷ்டை தின உற்சவம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; அஷ்டமி பூப்பிரதட்சனம் யொட்டி ராமேஸ்வரத்தில் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் தங்க ... மேலும்
 
temple news
சிதம்பரம்: கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில், உலக சாதனை முயற்சியாக, 900க்கும் மேற்பட்ட நாட்டிய ... மேலும்
 
temple news
கூடலுார்; கூடலுார் கூடலழகிய பெருமாள் கோயிலில் கூடாரவல்லி திருவிழா வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலுக்கு வரும் பாதயாத்திரை சாரல் மலையில் சாலைகளில் பாதுகாப்புக்கு இன்றி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar