பதிவு செய்த நாள்
30
மார்
2023
02:03
பழநி: பழநி, கோயில் பங்குனி உத்திர திருவிழா திருஆவினன்குடி கோவிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது.
பழநி, அடிவாரம், திருஆவினன்குடி கோயிலில், பங்குனி உத்திர திருவிழா நேற்று துவங்கியது. இதில் சேவல், மயில், வேல் வரையப்பட்ட மஞ்சள்நிற கொடி வேதமந்திரங்கள் முழங்க, காலை 10:55 மணிக்கு பக்தர்களில் அரோகரா கோசத்துடன் கொடியேற்றம் நடைபெற்றது. ஈரோடு மாவட்டம் கொடுமுடி, காவிரி நதி, தீர்த்தக்காவடிக்கு புகழ் பெற்ற இத்திருவிழாவில் ஏப்.,4 வரை வள்ளி, தெய்வானை, முத்துக்குமாரசுவாமி, தந்த பல்லாக்கில் கிரிவீதி உலா நடைபெறும். ஆறாம் நாள் திருவிழாவில் ( ஏப்.,3ல்), மாலை வள்ளி, தெய்வானை, முத்துக்குமாரசாமி திருக்கல்யாணம் நடைபெறும். அன்று இரவு வெள்ளி ரதத்தில் சுவாமி புறப்பாடு சன்னதி வீதி, கிரி வீதியில் நடைபெற உள்ளது.
பங்குனி உத்திர தினமான ஏப்..4.,ல் கிரிவீதியில் மாலை 4:45 மணிக்கு மேல் திருத்தேரோட்டம் நடைபெறும். வெள்ளி ஆட்டுக்கிடா, வெள்ளி காமதேனு, தங்கமயில், வெள்ளி யானை வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெறும். ஏப்.7., இரவு கொடி இறக்குதல் நடைபெறும். அதன்பின் தங்க குதிரை வாகனத்தில் சுவாமி பெரிய நாயகி அம்மன் கோயிலுக்கு எழுந்தருளால் நடைபெறும். பங்குனி உத்திர கொடியேற்ற நிகழ்ச்சியில் கோயில் இணை ஆணையர் நடராஜன், துணை ஆணையர் பிரகாஷ், சித்தநாதன் அண்ட் சன்ஸ் சித்தநாதன் பழனிவேல், கார்த்திகேயன், கந்த விலாஸ் செல்வகுமார் உள்ளிட்ட நகரின் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். குடமுழுக்கு நினைவரங்கத்தில், தினமும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.