பதிவு செய்த நாள்
20
செப்
2012
10:09
புதுச்சேரி: புதுச்சேரி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, புதுச்சேரி, மணக்குள விநாயகர் கோவிலில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
புதுச்சேரியில் அமைந்துள்ள, பிரசித்தி பெற்ற கோவிலான, மணக்குள விநாயகர் கோவிலில், செப்.,19 காலை, 4:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சுவாமிக்கு, விசேஷ அபிஷேகம் நடந்தது. மூலவருக்கும், உற்சவருக்கும், தங்க கவசத்துடன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விநாயகர் சதுர்த்தி என்பதால், அதிகாலையிலேயே, ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். நீண்ட வரிசையில் சென்று, சாமி தரிசனம் செய்தனர். மாலையில் 7 மணிக்கு, வெள்ளி மூஷிக வாகனத்தில் மணக்குள விநாயகர் வீதியுலா நடந்தது.