பதிவு செய்த நாள்
20
செப்
2012
10:09
நகரி: விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, விநாயகருக்கு நைவேத்யமாக படைக்க, கடந்த ஆண்டு தயாரிக்கப்பட்ட, லட்டு எடையை விட, இந்த ஆண்டு, 730 கிலோ எடை கூடுதலாக தயார் செய்து, மீண்டும் கின்னஸ் சாதனை ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆந்திராவில், கிழக்கு கோதாவரி மாவட்டம், தாபேஸ்வரம் டவுனை சேர்ந்த, ஸ்ரீ பக்த ஆஞ்சநேயா ஸ்வீட் நிறுவனம், இந்த ஆண்டு விநாயக சதுர்த்தி பண்டிகைக்காக, 6,300 கிலோ எடையுள்ள லட்டு பிரசாதம் தயார் செய்து, "இந்தியா புக் ஆப் ரிகார்டில் இடம் பிடித்துள்ளது. ராஜமுந்திரியில், பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள விநாயகருக்கு படைப்பதற்காக தயார் செய்யப்பட்டுள்ள இந்த லட்டு தான், உலகிலேயே மிகப் பெரியது என, "இந்தியா புக் ஆப் ரிகார்ட்ஸ் பிரதிநிதிகள் கூறியுள்ளனர். நிறுவன உரிமையாளர், சலாதி வெங்கடேஸ்வர ராவிடம், இதற்கான அங்கீகார பத்திரம் வழங்கப்பட்டது.