பழநி மலைக் கோயிலில் நாளை முதல் தங்கரத புறப்பாடு ரத்து
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஏப் 2023 11:04
பழநி: பழநி மலைக் கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு நாளை (ஏப்.2) முதல் ஏப்.6 வரை தங்கரத புறப்பாடு ரத்து செய்யப்பட உள்ளது.
பழநி மலைக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வருகை புரிகின்றனர். பக்தர்கள் வருகை தருவது அதிகரித்த வண்ணம் உள்ளது. பழநி கோயிலுக்கு பக்தர்கள் தீர்த்த காவடிகள் கொண்டு வந்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். தினமும் சாயரட்சை பூஜைக்கு பிறகு தங்கத்தேர் புறப்பாட்டில் பக்தர்கள் ரூ.2000 கட்டி கலந்துகொண்டு தேர் இழுக்கலாம். பக்தர்கள் பலர் தரிசனம் செய்து வழிபடுகின்றனர். இந்நிலையில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு (ஏப்.2) நாளை மலைக்கோவிலில் தங்கரத புறப்பாடு, கோயில் நிர்வாகம் சார்பில் நடைபெறும். இதில் பக்தர்கள் பணம் கட்டி கலந்து கொள்ள இயலாது. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யலாம். மேலும் ஏப்.3 முதல் ஏப்.6 வரை மலைக் கோயிலில் தங்க ரதத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறாது.