தென்காசி முத்தாரம்மன் கோயில்களில் பூக்குழி திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஏப் 2023 01:04
தென்காசி: தென்காசி மேல முத்தாரம்மன், கீழமுத்தாரம்மன் கோயில்களில் பங்குனி பெருந்திருவிழாவை முன்னிட்டு நேற்று பூக்குழி திருவிழா நடந்தது. தென்காசி மேலமுத்தாரம்மன் கோயிலில் பங்குனி பெருந்திருவிழா கடந்த 21ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 7ம் திருநாளன்று இரவு கிருஷ்ணர், திரவுபதி அம்மனுக்கு வஸ்திரம் கொடுக்கும் நிகழ்ச்சி, 9ம்திருநாளன்று இரவு திரவுபதி அம்மனுக்கு அர்ஜூனன் காட்சி கொடுக்கும் அர்ஜூனன்தபசு நிகழ்ச்சி நடந்தது. விழாவில் சிறப்பு பெற்ற பூக்குழி திருவிழாநேற்று அதிகாலை 5 மணிக்கு நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று (1ம்தேதி) மதியம் 12மணிக்கு அபிஷேகம், தீபாராதனை, இரவு 8மணிக்கு அம்பாள் பூங்கோயில் வாகனத்தில் எழுந்தருளல் நடைபெற்றது. வரும் 4ம்தேதி காலை மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடைகிறது.
* இதுபோல் தென்காசி கீழமுத்தாரம்மன் கோயிலில் பங்குனி பெருந்திருவிழா கடந்த 21ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து நாள்தோறும் ஒவ்வொரு கட்டளைதாரர்கள் சார்பில் மதியம் 12 மணிக்கு அபிஷேகம், தீபாராதனை, இரவு அம்பாள் வெவ்வேறு வாகனங்களில்எழுந்தருளல்நடந்தது. விழாவில் சிறப்பு பெற்ற பூக்குழி திருவிழா நேற்று அதிகாலை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று (1ம்தேதி) மதியம் 12 மணிக்கு அபிஷேகம், தீபாராதனை, இரவு அம்பாள் பூங்கோயில் வாகனத்தில் எழுந்தருளல் நடக்கிறது. வரும் 4ம்தேதி காலை மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடைகிறது.