பரமக்குடி: பரமக்குடி சின்ன கடை தெருவில் அருள்பாலிக்கும் துர்க்கை அம்மன் சுடர் கிரீடம் தாங்கி அருள் பாலித்தார். இக்கோயிலில் நேற்று பங்குனி வெள்ளிக்கிழமையை ஒட்டி காலை பாலபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேக ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து மாலை சிகப்பு வண்ண பட்டு உடுத்தி, சந்தன காப்பு அணிந்து பக்தர்களுக்கு அருள் அளித்தார். தீபாராதனைக்கு பின் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.