திருவாலங்காடு:திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோவிலின் உபகோவிலான கோதண்டராம சுவாமி கோவில், கனகம்மாசத்திரம் அடுத்த, நெடும்பத்தில் அமைந்துள்ளது.
இந்த கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் 11 நாட்கள் ராமநவமி பெருவிழா நடைபெறும். இதையொட்டி கடந்த மாதம் 21ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. இதில் தொடர்ந்து 8 நாட்கள் காலை மற்றும் மாலையில் உற்சவ வெங்கடேச பெருமாள் பல்வேறு வாகனங்களில், வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதையடுத்து, திருக்கல்யாணம் நடைபெற்றது. பின், மாலை 6:00 மணிக்கு ராமநவமி வீதி புறப்பாடு நடைபெற்றது. நேற்று காலை, திருமஞ்சனமும், புஷ்பயாகத்துடன் விழா நிறைவு பெற்றது.