திருத்தணி:திருத்தணி, காந்தி நகர் பகுதியில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி விழா, கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
தினமும் காலையில் மூலவருக்கு சந்தன காப்பு மற்றும் தீபாராதனை நடந்து வருகிறது. விழாவின் ஏழாம் நாளான கடந்த, 29ம் தேதி, திரவுபதியம்மன் திருமணம் நடந்தது. இதைத் தொடர்ந்து, ஒன்பதாம் நாளான நேற்று, நண்பகலில் கோவில் வளாகத்தில் சுபத்திரை அம்மன் திருமணம் நடந்தது. இதற்காக ஒரு யாக சாலை அமைத்து சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டது. அதை தொடர்ந்து உற்சவர் அர்ஜுனன் மற்றும் சுபத்திரை அம்மனுக்கு திருமணம் நடந்தது. இம்மாதம் 3ம் தேதி அர்ஜுனன் தபசு, 9ம் தேதி துரியோதனன் படுகளம் மற்றும் தீமிதி விழா, 10ம் தேதி தர்மர் பட்டாபிஷேகத்துடன் நடப்பாண்டிற்கான தீமிதி விழா நிறைவடைகிறது.