நான்குநேரி வானமாமலை பெருமாள் கோயிலில் தங்க சப்பரம் வீதியுலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஏப் 2023 09:04
நான்குநேரி: நான்குநேரி வானமாமலை பெருமாள் கோயிலில் பங்குனி உற்சவ 7ம் திருநாளான நேற்று தங்கசப்பரத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. நான்குநேரி வானமாமலை பெருமாள் கோயிலில் திருமலை திருப்பதியில் இருந்து இங்கு எழுந்தருளியவரமங்கைத் தாயாருக்கும், வானமாமலை பெருமாளுக்கும் நடக்கும் திருக்கல்யாண உற்சவம் ஆண்டுதோறும் பங்குனி மாதம் பங்குனி திருக்கல்யாண திருவிழா என 11 நாட்கள் நடைபெறுகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கான திருவிழா நான்குநேரி மடத்தின்31 வது மடாதிபதியான மதுரகவி வானமாமலை ராமானுஜ ஜீயர் ஆசிர்வாதத்துடன் கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 7ம் திருநாளான நேற்று காலை வானமாமலை பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. மாலையில் வானமாமலை பெருமாள், வரமங்கைத் தாயார் தங்கசப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா நடந்தது. தொடர்ந்து கண்ணாடி சப்பரம் வீதியுலாநடந்தது. ஏப். 4ம் தேதி 10ம் திருநாள் காலையில் தங்கதேரோட்டம், அன்று இரவு வானமாமலை பெருமாள், வரமங்கைத் தாயாருக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. பங்குனி உத்திர நாளில் தீர்த்தவாரி மற்றும் பட்டணபிரவேசம் வைபவமும் நடக்கிறது.