பதிவு செய்த நாள்
20
செப்
2012
11:09
பவானி: பவானி பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழா மிக சிறப்பான முறையில் கொண்டாப்பட்டது.பவானியில் உள்ள சங்கமேஸ்வரர் கோவில், காசி விஸ்வநாதர் கோவில், பழனியாண்டவர் கோவில், காமாட்சி அம்மன் கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில், எல்லை அம்மன் கோவில், செல்வ விநாயகர் கோவில் உட்பட பல்வேறு இடங்களில் விநாயகர் சதுர்த்தி விழா அதிகாலை கணபதி ஹோமத்துடன் துவங்கியது.தொடர்ந்து காலை சிறப்பு அபிஷேகம், மஹா தீபாராதனை நடத்தி அப்பகுதியில் உள்ள பக்த கோடிகளுக்கு சர்க்கரை பொங்கல், சுண்டல், கொழுக்கட்டை போன்றவை பிரசாதங்களாக வழங்கப்பட்டது.பவானி நகரத்தில் காமராஜ் நகர், அண்ணாநகர், வர்ணபுரம், பழனிபுரம், தேவபுரம், பாவடி தெரு, காவேரி வீதி போன்ற பல்வேறு இடங்களில், 27 விநாயகர் சிலைகள், ஆறு அடி முதல், 12 அடி வரை பல வகைகளில் நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டன. இவை வரும் ஞாயிறு அன்று பவானி, கூடுதுறையில் உள்ள காவிரி ஆற்றில் கரைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.