உறையூர் கமலவல்லி நாச்சியாருடன் ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சேர்த்தி சேவை
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஏப் 2023 06:04
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடந்து வரும், பங்குனி உற்சவத்தின் ஆறாம் திருநாளில், உறையூர் கமலவல்லி நாச்சியாருடன், ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சேர்த்தி சேவை நடந்தது.
பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் 108 வைணவ திவ்ய தேசங்களில் முதன்மையானதும் ஆன திருச்சிராப்பள்ளி ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் பங்குனி மாதத்தில் நடைபெற்று வரும் ஆதிபிரம்மோத்வத்தின் ஆறாம் திருநாளும், ஆயில்யம் நட்சத்திரமும் சேர்ந்த திருநாளில் உற்சவர் ஸ்ரீநம்பெருமாள் ஸ்ரீரங்கத்திலிருந்து புறப்பட்டு உறையூர் சென்றடைந்து அங்கு அருள்மிகு கமலவல்லி நாச்சியாருடன் சேர்த்தி கண்டருள்வார். அந்த வகையில் ஆறாம் திருநாளான இன்று அதிகாலை 3.30 மணிக்கு ஸ்ரீநம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து தங்கபல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி உறையூர் அருள்மிகு கமலவல்லி நாச்சியார் கோயிலில் அமைந்துள்ள மஹாஜன உபய மண்டபத்திற்கு பகல் 11.00 மணியளிவில் எழுந்தருளினார். ளுகிறார். மேற்படி மண்டபத்திலிருந்து புறப்பட்டு பகல் 12.00 மணியளவில் நாச்சியார் மண்டபத்தில் எழுந்தருளி, பின்னர் சேர்த்தி மண்டபம் சென்றடைந்து அருள்மிகு கமலவல்லி நாச்சியாருடன் சேர்த்தி சேவை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.