பதிவு செய்த நாள்
20
செப்
2012
11:09
ப.வேலூர்: ப.வேலூர் அருகே, சுல்தான்பேட்டையில் உள்ள வீடு ஒன்றில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு உடைக்கப்பட்ட தேங்காயில், கொழுக்கட்டை வடிவில், இரு தேங்காய் பருப்பு இருந்தது. அதை பார்த்த அப்பகுதி மக்கள், ஆச்சரியமடைந்தனர்.ப.வேலூர் அருகே, சுல்தான்பேட்டையை சேர்ந்தவர் பழனிசாமி. அவரது வீட்டில், நேற்று காலை, விநாயகர் சதுர்த்தியையொட்டி பூஜை செய்யப்பட்டது. அதற்காக, வீட்டில் ஸ்வாமி படங்களை வைத்து, தேங்காய் உடைக்கப்பட்டது.அப்போது, அந்த தேங்காயினுள், பிள்ளையாருக்கு படைக்கப்படும் கொழுக்கடை வடிவத்தில், இரு தேங்காய் பருப்பு இருந்துள்ளது. அதைக் கண்டு பழனிசாமி குடும்பத்தினர் ஆச்சரியம் அடைந்தனர். இதை, அப்பகுதி மக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்துச் சென்றனர்.