பெருமாநல்லூர் கொண்டத்துகாளியம்மன் கோவில் குண்டம் விழா: பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஏப் 2023 10:04
பெருமாநல்லூர் : திருப்பூர், மாவட்டம் பெருமாநல்லூர் கொண்டத்துகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பெருமாநல்லூரில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற கொண்ட த்துக்காளியம்மன் கோவில் குண்டம் தேர்த்தி ருவிழா இன்று நடைபெற்று வருகிறது. இவ்விழாவை முன்னிட்டு அம்மனுக்கு ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. 2ம் தேதி மஞ்சள் நீர் மற்றும் பொங்கல் வைத்தலும், 3ம் தேதி குண்டம் திறந்து பூ போடுதல் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல் இன்று 4ம்தேதி அதிகாலை 4 மணிக்கு துவங்கியது. திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று மாலை 3.30 மணிக்கு தேர் வடம் பிடித்தல் நடக்கிறது. 8ம் தேதி மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவுபெறுகிறது.