பதிவு செய்த நாள்
04
ஏப்
2023
10:04
பழநி: பழநி, கோயில் பங்குனி உத்திர திருவிழாவில் திருத்தேரோட்டம் நடைபெற்றது.
பழநி, அடிவாரம், திருஆவினன்குடி கோயிலில், பங்குனி உத்திர திருவிழா மார்ச்.29.ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. திருஆவினன்குடி கோயில் முன் ஏப்.,3ல் வள்ளி, தெய்வானை, முத்துக்குமாரசாமி திருக்கல்யாணம் நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம் அலங்காரம், தீபாதாரணை நடந்தது. வெள்ளி ரதத்தில் சுவாமி புறப்பாடு சன்னதி வீதி, கிரி வீதியில் நடைபெற்றது.
பங்குனி உத்திர தினமான இன்று (ஏப்..4.,) அதிகாலை தீர்த்தம் வழங்குதல் நடைபெறும். கிரிவீதியில் சுவாமி திருத்தேரில் சுவாமி எழுந்தருளினார். மாலை 4:48 மணிக்கு திருத்தேர் வடம் பிடிக்கப்பட்டது. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா கோசத்துடன் பக்தர்கள் இழுக்க தேர், கோயில் யானை கஸ்தூரி தேர் பின்னால் வர கிரிவீதியில் வலம் வந்தது.பின் தேர் நிலைக்கு வந்தது. அதன் பின் தேர்க்கால் பார்த்தல் நடந்தது. நாளை ஏப்.5,ல் தங்க குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்று, ஏப்.6,ல் வெள்ளி பிடாரி மயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற உள்ளது. ஏப்.7., இரவு கொடி இறக்குதல் நடைபெறும். அதன்பின் தங்க குதிரை வாகனத்தில் சுவாமி பெரிய நாயகி அம்மன் கோயிலுக்கு எழுந்தருளல் நடைபெறும்.