திருநகரி கல்யாண ரெங்கநாதர் பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஏப் 2023 12:04
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருநகரியில் 108திவ்யதேசங்களில் ஒன்றான கல்யாணரெங்கநாதர்பெருமாள் கோயில் உள்ளது.இங்கு திருமங்கையாழ்வார் தனி சன்னதியில் இக்கோயிலில் அருள்பாலிக்கிறார்.இக்கோயிலில் பங்குனி உற்சவம் கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றுவருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. முன்னதாக திருநகரியிலிருந்து கல்யாண ரெங்கநாதபெருமாள் தாயாருடன் திருவாலி கிராமத்தில் உள்ள பஞ்ச நரசிம்ம ஸ்தலங்கலில் ஒன்றான லெட்சுமி நரசிம்மர் கோயிலுக்கு புறப்பட்டார்.வழிநெடுக்கிலும் பக்தர்கள் பெருமாளுக்கு சிறப்பு வழிபாடு செய்தனர். திருவாலியில் பக்தர்கள் வெண்பட்டு அணிவித்து பெருமாளை வரவேற்றனர். தொடர்ந்து கோயிலில் திருக்கல்யாண வைபவம் சடங்குகள் தொடங்கி நடைபெற்றது. சிறப்பு யாகம் செய்யப்பட்டு வேதவிற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்கிட சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதன்பின்னர் மங்களாசாசனம் செய்து மங்களநான் அணிவித்து பெருமாள் தாயார் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.