திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர திருக்கல்யாணம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஏப் 2023 04:04
திருவண்ணாமலை :திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற்றது.
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் திருக்கல்யாண மண்டபத்தில், உண்ணாமுலையம்மன் சமேதராய் அண்ணாமலையார் மற்றும் பராசக்தியம்மன் எழுந்தருளினர். தொடர்ந்து திருக்கல்யாண வைபவம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் உண்ணாமுலையம்மன் சமேதராய் அண்ணாமலையார் மற்றும் பராசக்தியம்மன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு கொளுத்தும் வெயிலில் சுவாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு, டேங்கர் லாரி மூலம் கொண்டுவரப்பட்ட குளிர்ச்சியான மோர் இலவசமாக வழங்கப்பட்டது.