பாண்டியர் கால சுப்பிரமணியர் கோவிலில் பங்குனி உத்திர திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஏப் 2023 05:04
உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே நாலுகரை புத்தூர் கிராமத்தில் பாண்டியர்கள் கால சுப்பிரமணியர் கோயில் உள்ளது. இங்குள்ள முருகன் போருக்கு புறப்படுவது போல ஆயுதங்கள் ஏந்தி காலில் தண்டை அணிந்து காட்சியளிக்கிறார். பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சுப்பிரமணியருக்கு வள்ளி, தெய்வானையுடன் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. பக்தர்கள் சீர் வரிசையுடன் திருக்கல்யாணு வைபவத்தில் பங்கேற்றனர். எழுமலை மாதாந்திர சுப்பிரமணியன் கோயிலிலும் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.