பெரியகுளம்: லட்சுமிபுரம் லட்சுமி நாராயணாப் பெருமாளுக்கு திருக்கல்யாணம் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் லட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் பங்குனி உத்திரம் பவுர்ணமியை முன்னிட்டு லட்சுமி நாராயணப் பெருமாளுக்கு நாதஸ்வரம், மேளதாளம் ஒலிக்க திருக்கல்யாணம் நடந்தது. பக்தர்கள் அர்ச்சதை தூவினர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். முன்னதாக யாகசாலை பூஜை நடந்தது. பக்தர்களுக்கு மஞ்சள் கயிறு மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. பக்தர்கள் மொய் எழுதினர். ஏற்பாடுகளை அர்ச்சகர் ராமானுஜர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.