வத்தலக்குண்டு: கீழக்கோவில்பட்டியில் பகவதி அம்மன் கோயில் திருவிழா நடந்தது. மார்ச் 21ல் சாமி சாட்டுதலுடன் துவங்கியது. ஏப்.4 செவ்வாய் அன்று இரவு பூசாரி வீட்டில் இருந்து சாமி அழைக்கப்பட்டு மருதா நதியில் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு வாண வேடிக்கையுடன் கிராமத்திற்கு அழைத்து வரப்பட்டது. பல்வேறு மண்டகப்படிகளில் அம்மன் எழுந்தருளி காட்சியளித்தார். மண்டகப்படிகளில் சிறப்பு பூஜை நடந்தது. கிராமத்தை வலம் வந்த அம்மன் கோயிலில் அமர வைக்கப்பட்டு மாவிளக்கு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து பால்குடம் எடுத்து பக்தர்கள் பிரார்த்தனைகளை நிறைவேற்றினர். பொங்கல் வைக்கப்பட்டு கிடாக்கள் வெட்டப்பட்டு பிரார்த்தனை நிறைவேற்றினர். தீச்சட்டி எடுத்து வந்தனர். நேற்று மாலை அம்மன் முளைப்பாரி ஊர்வலத்துடன் கிராமத்தை வலம் வந்து மஞ்சள் நீராட்டுடன் பூஞ்சோலை சென்றடைந்தார். ஏற்பாடுகளை கிராமத்தினர், விழா கமிட்டினர் செய்திருந்தனர்.