திருப்பரங்குன்றத்தில் சூரசம்ஹாரம் : முருகப்பெருமானுக்கு இன்று பட்டாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஏப் 2023 08:04
திருப்பாங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா சூரசம்ஹார லீலை நிகழ்ச்சி நேற்று நடந்தது. இன்று சுப்பிரமணிய சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது. பங்குனித் திருவிழாவின் மூக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நாளை (ஏப். 8) நடக்கிறது. அதன் முன் நிகழ்ச்சியாக இன்று இரவு 7:45 மணிக்கு கோயில் ஆறுகால் பீடத்தில் சுப்பிரமணிய சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது.
சூரசம்ஹார லீலை: நேற்று மாலை வீதிஉலா நிகழ்ச்சியில் யானை, ஆடு, சிங்கம் உள்பட பல்வேறு தலைகளுடன் மாறி மாறி சூரபத்மன் முன் செல்ல குதிரை வாகனத்தில் வீரபாகு தேவரும், திருவிழா நம்பியார் சிவாச்சார்யார் வாள் ஏந்திச் சென்றார். தொடர்ந்து தங்க மயில் வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி வேலுடன் எட்டு திக்குகளிலும் விரட்டி சென்று சூரனை வதம் செய்த நிகழ்ச்சி நடந்தது. சொக்கநாதர் கோயில்முன்பு சூரசம்ஹார புராண கதையை பக்தர்களுக்கு சிவாச்சாரியார் கூறினார். தீபாராதனை முடிந்து சுவாமி வீதிஉலா நிகழ்ச்சி நடந்தது.