கொல்லங்குடி வெட்டுடையாள் காளியம்மன் கோயிலில் பங்குனி தேரோட்டம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஏப் 2023 10:04
சிவகங்கை : கொல்லங்குடி வெட்டுடையாள் காளியம்மன் கோயில் பங்குனி திருவிழா தேரோட்டம் நடைபெற்றது.
காளையார்கோவில் அருகே, அரியாகுறிச்சி பகுதியில் பிரசித்தி பெற்ற கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா சிறப்பாக நடைபெறும். இ்ந்த ஆண்டிற்கான விழா கொடியேற்றத்துடன் துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி தினந்தோறும் அம்மன் பல்வேறு வாகனங்களில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. முன்னதாக அதிகாலை 5.15 மணி முதல் 6.15 மணிக்குள் கோவில் முன்பு அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்தனர்.