Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உடுமலை மாரியம்மன் கோவில் தேர் ... சர்வ சக்தி விநாயகர் கோயிலில் வருடாபிஷேக விழா சர்வ சக்தி விநாயகர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலில் தேர் சக்கரங்களுக்கு உப்பு, மிளகு கொட்டி வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலில் தேர் சக்கரங்களுக்கு உப்பு, மிளகு கொட்டி வழிபாடு

பதிவு செய்த நாள்

07 ஏப்
2023
01:04

பொள்ளாச்சி; பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலில், இரண்டாம் நாள் தேரோட்டம் நேற்று நடந்தது. தேர் சக்கரத்துக்கு உப்பு, மிளகு கொட்டி பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

பொள்ளாச்சியில் உள்ள, பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் தேர்த்திருவிழா கடந்த மாதம், 14ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. கம்பம் நடுதல், பூவோடு வைத்தல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் தேரோட்டம் துவங்கியது. 12 அடி உயரம் உள்ள மரத்தேரில் விநாயகரும், 21 அடி உயரம் உள்ள வெள்ளித்தேரில் மாரியம்மனும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.  கோவிலில் இருந்து மார்க்கெட் வீதி வழியாக உலா வந்த தேர், வெங்கட்ரமணன் வீதியில் நிறுத்தப்பட்டது. தேரின் சக்கரத்தில் உப்பு, மிளகு கொட்டி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து, நேற்று வெங்கட்ரமணன் வீதி, உடுமலை ரோடு வழியாக உலா சென்று, சத்திரம் வீதியில் நேற்றிரவு தேர் நிறுத்தப்பட்டது. இன்று, மூன்றாம் நாள் தேரோட்டம் துவங்கி, கோவிலில் நிலை நிறுத்தப்படுகிறது. தொடர்ந்து, அம்மன் பரிவேட்டை, தெப்பத்தேர் வைபவமும் நடக்கிறது. நாளை, 8ம் தேதி அம்மன் மஞ்சள் நீராடுதல், கம்பம் எடுத்தல் நிகழ்ச்சியும், வரும், 10ம் தேதி மஹா அபிேஷக வழிபாடு நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தீபாவளிக்கு முந்தைய நாள் எம தீபம் ஏற்றுவது நம் மரபு. எம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். ... மேலும்
 
temple news
புதுடில்லி:  நாடு முழுதும் நாளை தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, டில்லியில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாயூரநாதர் சுவாமி கோயிலில் துலா உற்சவம் கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
இரண்டு பேருக்கு இடையில் மத்தியஸ்தம் செய்பவர் (பிரச்னைக்கு தீர்வு சொல்பவர்) தராசு போல நடுநிலையாளராக ... மேலும்
 
temple news
தீபாவளி நன்னாளில் எண்ணெய் தேய்த்துக் கொள்வதும், நல்ல நீரில் குளிப்பதும் அவசியம். குளிக்கும் நீர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar