மேலுார்: மேலுார் சக்திமாரியம்மன் கோயில் பங்குனி மாத திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் மார்ச் 24 முதல் காப்பு கட்டி விரதமிருந்தனர். நேற்று காலை சேனல்ரோட்டில் உள்ள விநாயகர் கோயிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக கோயிலை வந்தடைந்தனர். அங்கு அம்மனுக்கு பாலாபிஷேகமும், விளக்கு பூஜையும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.