அவிநாசி பட்டத்து அரசி அம்மன், கருப்பராயன் சாமி, பொன்னர் சங்கர் கோவிலில் ஆண்டு விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஏப் 2023 04:04
அவிநாசி: அவிநாசி சூளையில் எழுந்தருளியுள்ள பட்டத்தரசி அம்மன்,கருப்பராய சுவாமி, பொன்னர் சங்கர் உள்ளிட்ட பரிவார மூர்த்தி கோவிலில் ஆண்டு விழா நடைபெற்றது.
அவிநாசி சேவூர் ரோட்டில், சூளையில் எழுந்தருளியுள்ள பட்டத்தரசி அம்மன், கருப்பராய சுவாமி, பொன்னர் சங்கர் உள்ளிட்ட பரிவார மூர்த்திகள் கோவிலில் ஆண்டு திருவிழா நடைபெற்றது. முன்னதாக கடந்த மாதம் 24ம் தேதி காப்புக் கட்டுதழுடன் தொடங்கிய ஆண்டு விழாவில், கம்பம் நடுதல்,பூவோடு எடுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஆண்டு விழாவை முன்னிட்டு ஊர் பொதுமக்கள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.